நாட்டில் தொடர்ந்துவரும் மழையுடனான வானிலைக் காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி, காலி கேகாலை, குருநாகலை, நுவரெலியா, களுத்தறை, மாத்தறை, கண்டி, கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.