முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர அறிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்ததையடுத்தே அவர் மீது குறித்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தயசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், களுத்துறை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்டத்திற்கான புதிய அமைப்பாளராக சுனித் லால் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.