வெலிப்பன்னை மடவளை பகுதியில் ஒரு கிலோகிராம் ஹெரோயின் மற்றும் துப்பாக்கியொன்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
களுத்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,
இதன் போது 700 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய நிலையில் இரண்டு சந்தேகநபர்கள் முதலில் கைது செய்யப்பட்டு்ளளதுடன் வாகனமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மடவளை பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300கிராம் ஹெரோயின் 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கியொன்றும் இதன் போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன,
மேலும் பாணந்துறை,பண்டாரகம மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21,27 மற்றும் 29 வயதுகளையுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
களுத்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்