மெய்ப்பொருள் காண்பது அறிவு

விடுதலைப் புலிகள் இலங்கை அரசோடு ‘டீல்’ செய்தனர் – முன்னணி உறுப்பினர்! (Full Video)

- Advertisement -

தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கையின் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் பணம் வாங்கி ‘டீல்’ செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சட்டத்தரணி ந. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

Capital தொலைக்காட்சியின் விடிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், ரேலோ தேசிய அமைப்பாளர், குருசாமி சுரேந்திரனும் பங்கேற்றார்.

- Advertisement -

சுமந்திரன் தனது பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினரை வைத்துள்ளதாகவும் புலிகளின் ஆயுதங்களின் பயத்தின் காரணமாகவே அவ்வாறு பாதுகாப்பை வைத்திருப்பதாகவும் அவர் இதன் போது கூறினார்.

அத்துடன் தனது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய படையினரை வைத்துள்ள சுமந்திரன், மக்களின் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை விமர்சிக்க அருகதையற்றவர் என்றும் தெரிவித்தார்.

சுமந்திரனின் நேர்காணலின் மொழிபெயர்ப்பு முற்றிலும் சரியானது என்றும் அவர் சுமந்திரனின் கருத்துக்களுடன் உடன்படவில்லை என்றும் குருசாமி சுரேந்திரன் கூறினார்

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz