நாட்டில் தேர்தல் ஒன்று நடாத்தப்படாமல் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லப்படுவது பாரிய அபாயத்தை ஏற்படுத்தும் விடயமாகும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எனவே சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கமைய தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த கட்சியின் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமையவும் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரே தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் முற்பட வேண்டும்.
இந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ள கருத்துக்களின் பிரகாரம் எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்குள் தேர்தல் நடாத்தப்படுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது.
எனவே சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமையவே தேர்தல் நடாத்தப்பட வேண்டும் . சுகாதார பரிந்துரையின்றி தேர்தலை நடாத்துவது பாதுகாப்பானதாக கருத முடியாது. வாக்காளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சகளின் ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். எவ்வாறான ஒரு சூழ்நிலையிலும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுடாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.
ஏனென்றால் நாட்டில் தேர்தல் ஒன்று நடாத்தப்படாமல் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லப்படுவது பாரிய அபாயத்தை ஏற்படுத்தும் விடயமாகும் என்பதை நான் இங்கு தெரிவித்து கொள்கின்றேன்” என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.