மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் கொரோனா? வெளியான புதிய தகவல்!

- Advertisement -

வவுனியா, மகா கச்சகொடி கிராமத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 குடும்பங்கள் இன்றைய தினம் சுகாதார திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியா, மகா கச்சகொடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், அண்மையில் விடுமுறைக்காக வருகை தந்திருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

- Advertisement -

இதனையடுத்து, குறித்த கடற்படை வீரரின் மகா கச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகா கச்சகொடி பகுதியில் கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ. சீ.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த 21 குடும்பங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த கடற்படை வீரருடன் தொடர்பை பேணியதாக பம்பைமடுவில் தங்கவைக்கப்பட்டுள்ள 9 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மகா கச்சகொடி கிராமம் தவிர குறித்த கடற்படை வீரர் சென்ற வர்த்தக நிலையங்கள், காப்புறுதி நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் என்பவற்றைச் சேர்ந்த 115 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரீட்சை நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கைகள்!

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கு விசேட ஏற்பாடுகள்!

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று முதல்  இணைய (Online) வழியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேற்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்  தொற்று பரவுவதை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு அதிகாரி விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

கடந்த வருடம் 11 ஆம் திகதி நிலவரப்படி,  சஹரான் ஹாஷிம் குண்டு வெடிப்பை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் தொடர்பாக சுமார் 15 ஆயிரம் பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின்...

ஊரடங்கு பகுதிகளில் விற்பனை நிலையங்களை  திறக்க அனுமதி!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள், அத்தியாவசிய சேவை நிலையங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை நிலையங்களை  திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றையதினம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விளக்கமறியலில் உள்ளவர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களில் 08 பேர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின்...

Developed by: SEOGlitz