அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட New South Wales, மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் களியாட்டவிடுதிகள் என்பன இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த இரண்டு மாத காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் உணவகங்கள் மற்றும் களியாட்டவிடுதிகள் என்பன திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அவுஸ்திரேலியாவின் சிட்னி , விக்டோரியா , குயின்ஸ்லாந்து மற்றும் மெல்பர்ன் ஆகிய நகரங்களில் முடக்க செயற்பாடுகள் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியாவில் கொரொனா தொற்றுக்குள்ளான ஆறாயிரத்து 989 பேர் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 98 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.