மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு!

- Advertisement -

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு  நஷ்டஈடு வழங்கப்படும் என  யாழ் மாவட்ட அரசாங்க க.மகேசன் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள நிலைமைகள் தொடர்பில் இன்று  ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபர் தொடர்ந்து தெரிவிக்கையில்..

யாழ்ப்பாண மாவட்டத்தில் புயல் தாக்கத்தின் கடந்த 21ஆம் திகதியில் இருந்து  காற்று அதிகரித்து காணப்பட்டது . புயல் அபாயத்தை தொடர்ந்து வீசிய  காற்று மணிக்கு60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

- Advertisement -

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன அதில் ஒரு வீடு முழுமையாகவும், மிகுதி 78வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கிறது. அதேபோல் 204 குடும்பங்களைச் சேர்ந்த 658  பேர்  3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

கைதடி கலை வாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து ஒரு பெண்மணி காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்.
சிறு முயற்சியாளர்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளதுள்ளது  6 பேர் தொழில் பாதிப்பு அடைந்துள்ளார்கள் அதிலும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து அவரது படகு சேதமடைந்துள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கை பாதிப்படைந்துள்ளது எனினும் வீடுகள் பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது காற்றின் பாதிப்பு தொடர்பான  அறிக்கையினை எமது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி யுள்ளோம்.
தொழில் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
இன்றும் நாளையும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை நாடு புதிய விதிப்படி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரைக்கும் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படஇருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை தொடக்கம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது கொழும்பு கம்பகா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி  பாதுகாப்பான முறையில்  போக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனைய விடயங்களை செயற்படுத்துவதற்காக தீர்மானித்துள்ளோம்.
தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது உள்ளூர் போக்குவரத்து சற்று அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம் பெற்று வருகின்றது அதிலும் குறிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றப்படுவதோடு அவை தொடர்ச்சியாக பின்பற்றப்படுகின்றதா என அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது.
அதோடு தனியார் போக்குவரத்துச் சேவையில் நின்டுகொண்டு பயணிகள் பயணம் செய்வது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே இது தொடர்பில் நாங்கள் தனியார் போக்குவரத்து சபையினருடன் இது தொடர்பில்  பேசஉள்ளோம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் பஸ் சேவையை அதிகரிப்பதற்காக வேலைத்திட்டத்தினை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.
அத்தோடு தீவு பகுதிக்கான போக்குவரத்துக்கும் வழமைபோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்று வருகின்றது காற்றின் தாக்கத்தின் காரணமாக சிறு தடங்கல் ஏற்பட்டுள்ள போதிலும் தீவு பகுதிக்கான போக்குவரத்து சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகிறது.
ஆலயங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடுவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் நாங்கள் அறிவித்துள்ளோம் அதிலும் மத வழிபாட்டுத்தலங்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன்.
எங்களுடைய உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக “சௌபாக்கியா “கொள்கை அதாவது விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் முயற்சி உங்களுடைய யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக வீட்டு தோட்டங்கள். விதை நாற்றுகள் மரக்கன்றுகள் போன்றவை சுமார் 26,000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன அதே போல உரவிநியோகமும் விவசாய உள்ளீடுகள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாய உள்ளீடுகள் போதுமானஅளவு கையிருப்பில் வைத்திருப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் நாங்கள் உரிய இடத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம் அதேபோல் விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பன இந்த விடயத்தை மிகவும் சிறப்பாக செயற்படுத்தி வருகின்றார்கள்.
சௌபாக்கியா வேலைத்திட்டமானது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
உரத் தட்டுப்பாடு நிலவி வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது எனினும் அது ஒரு தற்காலிகமான தட்டுப்பாடேயன்றி அது ஒரு பிரச்சினையான விடயமல்ல அது விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz