மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

- Advertisement -

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 9 மணயளவில் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு மற்றும் மிளகாய்த் தூள் கரைசல் ஆகியவற்றினைக் கொண்டு மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் அயலவர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதியில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, கந்தரோடை ஆலடி பகுதியில், வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு ஏழரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் என்பன நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளன.

கூரிய ஆயுதங்களுடன் குறித்த வீட்டுக்குள் புகுந்த கும்பல், அவர்கள் இருவரையும் மிரட்டி கட்டிவைத்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz