மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுப்பு!

- Advertisement -

யாழ். குடாநாட்டில் தற்போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமானால் வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் எஸ்.மோகனகுமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்…

“தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும் விழிப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் கொரோனா மற்றும் டெங்கு நோய்கள் தொடர்பாக அக்கறையுடன் சிந்தித்து செயற்பட்டால் மட்டுமே இந்த இரண்டு தொற்று நோய்களிலிருந்து வெற்றிகரமாக தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

உங்கள் வீடுகளில் உட்பகுதி மற்றும் சுற்றாடல் பகுதிகளில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் உள்ளனவா என்பதை பரிசோதனை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் பரிசோதனையின் போது உங்கள் வீடுகளில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் அடையாளப்படுத்தப்படுமேயானால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்பொழுது கொரோனா நோய் தொற்று அபாயம் தொடர்பில் நாம் அனைவரும் செயற்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதாரத்துறையினர் மற்றும் ஏனைய துறையினர் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக டெங்கு பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் எமது பிரதேசத்தில் கூடுதலாக காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் டெங்கு தாக்கத்தினால் எமது மக்கள் பட்ட இன்னல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. எனவே மக்கள் கொரோனா மற்றும் டெங்கு நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார திணைக்களத்தினரால் வழங்கப்படும் நடைமுறையினை பின்பற்றி செயற்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மதுபான சாலைகள் குறித்து அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் ஆறாம் திகதிகளில் அனைத்து...

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேர பிரதான செய்திகள் | 07:30 | 30.05.2020

மறைந்த இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றையதினம் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...