மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் சங்கிலித் திருடர்கள் கைது!

- Advertisement -

யாழ்ப்பாணத்தில் வீதியில் செல்லும் பெண்களிடம் தொடர்ந்து சங்கிலி திருட்டுக்களில் ஈடுபட்ட இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், புத்தூர் சோமஸ்கந்த வித்தியாலய ஒழுங்கைக்கருகில் சந்தேகத்திற்கிடமாக இலக்கத்தகடுகளை வயர்களால் கட்டிய நிலையில் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் மறித்து சோதனை மேற்கொண்டனர்.

- Advertisement -

இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்று, ஒன்பது தங்கச்சங்கிலிகள் மற்றும் இரண்டு கிராம் கெரோயின் போதைப்பொருளும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இருபாலை மடத்தடிப்பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதுடன், கோப்பாய் கொடிகாமம் சாவகச்சேரி சுன்னாகம் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 9 தங்கச்சங்கிலிகளில் ஆறு தங்கச் சங்கிலிகள் களவாடப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் மூன்று சங்கிலிகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவில்லை எனவும், சங்கிலியை பறிகொடுத்தவர்கள் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் சங்கிலித் திருடர்கள் கைது! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz