மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு பயனாளரிடம் கையளிப்பு!

- Advertisement -

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றான, வீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரியவின் எண்ணக்கருவுக்கு அமைய இராணுவ வீரர்களின் நிதிப் பங்களிப்பில் குறித்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.

- Advertisement -

கணவன் விபத்தில் உயிழந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்த சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J 160 அராலி கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கே குறித்த வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

அத்துடன் தனிநபர் ஒருவனால், குறித்த குடும்பத்தினருக்கு குழாய் கிணறும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகத்தின் நலன்புரி நிதியத்தின் நிதிப்பங்களிப்பில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியில் இந்த வீடு அமைக்கப்பட்டு, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி வணிகசூரியவினால் கையளிக்கப்பட்டது.

இதுவரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவ வீரர்களின் நிதிப்பங்களிப்பில் 250 இற்கு மேற்பட்ட வீடுகள் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பத்தினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த வீடுகள் இராணுவத்தினரால் கட்டிக் கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில், 513 பிரிகேட், 11சிஎல் ஜ, பிரிவின் பிரிகேடியர் மற்றும் இராணுவ கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நான்கு மாவட்டங்களுக்கு மாத்திரம்  ஊடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது மேலும் மூன்று...

அமரர் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் குறித்த முழு விபரம்!

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது உடல் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மலர்ச்சாலையில் இருந்து அவரது...

160 இலங்கைப் பிரஜைகள் மீண்டும் கொரியா நோக்கிப் பயணம்

கொரியாவில் பணிபுரிகின்ற நிலையில், நாடு திரும்பியிருந்த 160 இலங்கைப் பிரஜைகள் மீண்டும் கொரியா நோக்கிப் பயணித்துள்ளனர். இதற்கமைய, மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக அவர்கள் மத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான...

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்துவருவதற்கான புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம்...

நாட்டின் பல பகுதிகளில் 200மி.மீ மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...