மெய்ப்பொருள் காண்பது அறிவு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் ஆரம்பம்!

- Advertisement -

இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை தமது சேவைகள் வழங்கப்படும் எனவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்தரங்களை வழங்குதல், வாகன இலக்கத் தகடுகளை வழங்குதல், வாகனங்களைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில், உரிய திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஒருநாள் சேவை, மீள் அறிவித்தல் வரை வழங்கப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முல்லைத்தீவில் பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினையும் பொலிஸார்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு!

கல்கிஸ்ஸ - சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன்  தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...