இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை தமது சேவைகள் வழங்கப்படும் எனவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்தரங்களை வழங்குதல், வாகன இலக்கத் தகடுகளை வழங்குதல். வாகனங்களைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில், உரிய திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஒருநாள் சேவை, மீள் அறிவித்தல் வரை வழங்கப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது