மெய்ப்பொருள் காண்பது அறிவு

மே மாதத்திற்கான 5 ஆயிரம் கொடுப்பனவு செலுத்தும் நடவடிக்கை 11ஆம்திகதி ஆரம்பம்!

- Advertisement -

மே மாதத்திற்கான 5 ஆயிரம் கொடுப்பனவு செலுத்தும் நடவடிக்கை இந்த மாதம் 11ஆம்திகதி ஆரம்பமாக உள்ளது.

ஜனாதிபதி  ஊடகப் பிரிவு  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், குறித்த 5ஆயிரம் கொடுப்பனவுகளை இந்த மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம்திகதி வரை வீடுகளுக்கு சென்று கையளிக்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்,  முதியவர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் சிறுநீரகநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,  விவசாயிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோருக்கே 5 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த திட்டத்தின் ஊடாக இந்த மாதம் 6 இலட்சத்து 29 ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்களுக்கு  5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக முதியோர்களுக்கானதேசிய செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதவேளை, அனைத்து ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் இன்றும்  நாளையும் வழங்கப்படவுள்ளன.

பொருளாதார மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி இதற்கான நடவடிக்கைகளைமுன்னெடுத்துள்ளது  ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்குமான ஓய்வூதியம் மாதாந்தம்10ஆம் திகதி வழமையாக வழங்கப்பட்டு வருகிறது.

எனினும்,  வெசாக் தினம் மற்றும் எதிர்வரும்10 ஆம் திகதி  வார இறுதி நாள் என்ற காரணத்திங்களினால்,  இந்த மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை இன்றும்நாளையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இன்று இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

களனிவெளி புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான களனிவெளி புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் சேவையில் இயங்கும் இரு புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த ரயில் போக்குவரத்துக்கள்...

லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி   தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில்  குறித்த நபர்கள்...

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

நாட்டில் தற்போதைய  நிலையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்   நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைமையில்  காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்...

தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை  இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய  கடிதங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

Developed by: SEOGlitz