மெக்ஸிகோ தனது நாட்டின் போக்குவரத்து, சுரங்க மற்றும் கட்டுமானத் துறைகளின் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.
இதற்கமைய, தனது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாத வகையில் சில முக்கிய துறை சார்ந்த பணிகளை மீள ஆரம்பிப்பது குறித்து மெக்ஸிகோ அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதன்படி, புதிய சுகாதார விதிமுறைகளுக்கு அமைய விரைவில் ஏனைய நிறுவனங்களையும் மீள ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மெக்ஸிகோவில் 51 ஆயிரத்து 633 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 ஆயிரத்து 332 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.