மெக்ஸிகோவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 ஆயிரத்து 329 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, மெக்ஸிகோவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை65 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 190 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மெக்ஷிக்கோ சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மெக்ஸிகோவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மெக்ஸிகோவில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 44 ஆயிரத்து 919 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.