மெய்ப்பொருள் காண்பது அறிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு!

- Advertisement -

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காய் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் முழுவதும் இன்று அனுஷ்டிக்கப்பட்டன.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கப்பட்டது.

- Advertisement -

நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் காவல்துறையினரின் தடையையும் மீறி வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவிற்கு பயணித்த போது , கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் யாழ்.செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட போது , அங்கு வந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர், நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாக கூறி நிகழ்வினை தடை செய்தனர்.

அதன்போது , நீதிமன்ற உத்தரவை மதித்து குறித்த நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கிருந்து சென்றதுடன்,
நல்லூர் கோயில் வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தியதோடு முள்ளிவாய்க்கால் சிறப்புரை ஒன்றினையும் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தென்மராட்சி பிரதேச தலைமைக் காரியாலயத்திலும், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது முள்ளிவாய்க்காலில்உயிர் நீத்தவர்களுக்காக மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சமூக இடைவெளியினை பேணி குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வானது பின்னர் இடமாற்றப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச இந்து இளைஞர் பேரவையினது ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் இந்து இளைஞர் பேரவையின் தலைவர் மயூரசர்மாவின் தலைமையில் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்ததுடன் நினைவுத்தீபங்களும் ஏற்றி இறந்த ஆத்மாக்களுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

அத்துடன், வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்திலும், இன்று காலை 7.30 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்திக்கு விசேட பூசை இடம்பெற்றதுடன், முள்ளிவாய்க்கால் “மு” என்ற எழுத்து வடிவில் நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் , வர்த்தகர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மட்டக்களப்பில் இன்று காலை நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு,கல்லடி,புதுமுகத்துவாரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் தொடர்பான விபரங்களும் பதிவுசெய்யப்பட்டன.

நாட்டினது தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் மக்கள் கூடி நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லையென்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கு அமைவாகவே இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாடசாலை அனுமதிக்குத் தடை? : அமைச்சர் பந்துல!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Developed by: SEOGlitz