மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு மேலதிக நீதவான் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு!

- Advertisement -

முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இன்றைய தினம் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணசபைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரஷானி அபேசேகர நாளைய தினம் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு!

கல்கிஸ்ஸ - சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன்  தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  நபர்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...

இங்கிலாந்து போட்டி தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி!

இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுவதற்கே மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி...