மெய்ப்பொருள் காண்பது அறிவு

முகமாலைப் பகுதியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிப்பு!

- Advertisement -

முகமாலைப் பகுதியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த எலும்புக்கூட்டு எச்சங்களுடன், துப்பாக்கி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்பினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அப்பிரதேசத்தில் பளை பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த எச்சங்கள் மற்றும் துப்பாக்கி ஆகியன பதுங்குக் குழி ஒன்றினுள் புதைந்து காணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசம் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் அமைந்திருந்த பகுதி என்பதும் குறிப்பிட்ட எலும்புக்கூடுகளின் எச்சங்கள் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

மேற்படி எச்சங்கள் தொடர்பாக பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமாலைப் பகுதியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிப்பு! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். CAPITAL NEWS · Mahintha

அரிசி விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் 50 முதல் 75 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரிசியை அதிக விலைக்கு...

டெல்டா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாம் – சுகாதார தரப்பு வலியுறுத்தல்

டெல்டா வைரஸ் திரிபு நாடு முழுவதும் பரவுவதற்கு இடமளிக்க வேண்டாமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைகையில் அவர் இவ்வாறு...

டயகம சிறுமி உயிரிழந்த விவகாரம் – ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளார்

டயகம சிறுமி ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் சந்தேக நபராக பெயரிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இந்த...

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் திகதியில் மாற்றம்.

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையினை நடாத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz