மெய்ப்பொருள் காண்பது அறிவு

மழையுடனான வானிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

- Advertisement -

நாட்டில் தொடர்ந்துவரும் மழையுடனான வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, எலபாத, அயகம, கிரியெல்ல, குருவிட்ட, கொடகவெல, கஹவத்த மற்றும் கொலன்ன ஆகிய பிரதேச செயலகங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்திபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, கலவான, ஓப்பநாயக்க, பலாங்கொடை, பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல ஆகிய பிரசே செயலகங்களுக்கும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை மாவட்டத்தின் தெரனியகலை, புளத்கொஹுபிட்டிய, , றம்புக்கண, கலிகமுவ, கேகாலை, யட்டியாந்தோட்டை அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சல் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் கங்க இகல கோரல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவகோரல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த மாவட்டங்களில் உள்ள மலைபாங்கான பிரதேசங்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை களுகங்கையின்  நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக  மில்லக்கந்த பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன்  செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் 30 குடும்ங்களைச் சேர்ந்த 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...

தொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...

நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான...

கொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

Developed by: SEOGlitz