நாட்டில் கடந்த சில நாட்களாக மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிககைகளில் 2 ஆயிரத்து 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,
சட்டவிரோத மதுபான உற்பத்தி,சட்டவிரோத மதுபான விற்பனை,சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் சட்டவிரோத சிகரட் விற்பனை ஆகிய குற்றச்சாட்டுக்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
எவ்வாறாயினும் இந்தக் காலப்பகுதியில் சந்தேகநபர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும் ஊரடங்கு தளரத்தப்பட்டதும் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது,
அத்துடன் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த ஆறு மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
ஊரடங்கு விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்யும் மதுபானசாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் கூறுகின்றது