மெய்ப்பொருள் காண்பது அறிவு

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட சலுகைகள்!

- Advertisement -

இரத்தினபுரி மாவட்டத்தில் காற்று மற்றும் வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் பல்வேறு சலுகைகள் பெற்று கொடுக்கப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

இரத்தினபுரி, கிரியெல்ல, அயகம பகுதிகளுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை கேட்டறிந்த போதே அவர் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களையும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளையும் கண்டறிவதற்காக விசேட குழுவொன்றினையும் அமைக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குமாறு, இரத்தினபுரி மாவட்ட செயலாளருக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட சலுகைகள்! 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முல்லைத்தீவில் பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்பு!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான குறித்த பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளதுடன் அதனை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினையும் பொலிஸார்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்ந்தும் தடுத்துவைப்பு!

கல்கிஸ்ஸ - சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன்  தொடர்புடைய  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்  தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...