மெய்ப்பொருள் காண்பது அறிவு

மங்கள சமரவீர மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில்  முன்னிலை!

- Advertisement -

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று  மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளம் மாவட்டத்தில் முகாம்களில் தங்கியுள்ளவர்களை  வாக்களிப்பில் ஈடுபடுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் மூலம் மன்னாருக்கு அழைத்துச் செல்வதற்கான நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே  அவர் இவ்வாறு மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி உள்ளார்.

- Advertisement -

இந்த விடயம் தொடர்பில் முன்னதாக வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த 14ஆம் திகதி முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர  குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய அன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையான முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம்  குற்றப் புலனாய்வு பிரிவினர் ஐந்து மணி நேர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அவர் குறித்த சம்பவம் தொடர்பில்  வாக்குமூலம் வழங்குவதற்காக மீண்டும் இரண்டாவது நாளாகவும் இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பல சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

போதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது!

சீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...

இலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு!

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய ஒன்பது நவீன Unibuffels கவச வாகனங்கள், மாலி நாட்டில் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,  புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்களும் இவ்வாறு பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...

கொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்!

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...

Developed by: SEOGlitz