முன்னாள் நிதி அமைச்சர் மங்கள் சமரவீர குற்றப்புலனாய்வு பிரிவில் சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, புத்தளம் மாவட்டத்தில் முகாம்களில் தங்கியுள்ளவர்களை வாக்களிப்பில் ஈடுபடுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் மூலம் அழைத்துச் செல்வதற்காக நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கமைய நேற்று பிற்பகல் 2 மணிக்கு முன்னாள் நிதி அமைச்சர் மங்கள் சமரவீர குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி இருந்தார்.
இந்த நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் சுமார் ஐந்து மணி நேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுன் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.