மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களே அவதானம்! வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

- Advertisement -

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்திற் கொண்டு அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 01.30 மணி முதல் நாளை பிற்பகல் வரை நாட்டில் நிலவக் கூடிய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, கிழக்கு மாகாணம், வட மேல் மாகாணம், வட மத்திய மாகாணம், மேல் மாகாணம், தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், புத்தளம், அனுராதபுரம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில், 41 முதல் 54 செல்சியஸ் வரையான வெப்ப நிலை நிலவும் என வளிமண்டலவிய ல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணம், மேல் மாகாணம், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் குருணாகலை, பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக அவதான நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில், 32 முதல் 41 செல்சியஸ் வரையான வெப்பநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த வெப்பமான நிலைமைகளின்போது, அதற்கு ஏற்றவாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Pfizer கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 23 பேர் நோர்வேயில் உயிரிழப்பு!

Pfizer கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 23 பேர் நோர்வேயில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட ஒரு சில நாட்களில் அவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்...

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் மேலும் சில பகுதிகள்..!

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்துருவ பகுதியைச் சேர்ந்த துந்துருவ கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளே இவ்வாறு...

கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படமாட்டாதா?- ரணில் விளக்கம்

கொரோனா தொற்று பரவல் இந்த வருடத்துக்குள் முடிவுக்கு வரும் என தான் கருதவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த...

எதிர்வரும் 21ஆம் திகதி விமான நிலையங்கள் திறக்கப்படுமா?

எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டின் விமான நிலையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகளை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து நாடுகளினதும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும்...

அலி சப்ரியை பதவி நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்..!

நீதி அமைச்சர் அலி சப்ரியை பதவி நீக்குமாறு கோரி இன்றைய தினம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. சட்டத்தரணிகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளாக நியமிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவை பத்திரம் முன்வைத்துள்ளமையை கண்டித்து...

Developed by: SEOGlitz