மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுத் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை கையளிக்கவுள்ளதாக சுதந்திரக்கட்சி தெரிவிப்பு

- Advertisement -

இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை கையளிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவிக்கின்றது,

தற்போதைய கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலினை நடத்மதுவது தொடர்பில் தமது கட்சி அடைளாங்கண்டுள்ள அளவுகோல்களை மையப்படுத்தி இந்த கடிதத்தை கையளிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்,

- Advertisement -

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் நடத்தப்பட்ட சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,

இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியாக கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜுன் மாதம் 20 ஆம் திகதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது,

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கட்டாரிலிருந்து 235 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கைப் பிரஜைகள் 268 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, அவர்கள் கட்டாரின் தோஹா நகரிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL - 218 எனும்...

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணிவரையான ஆறு மணித்தியால காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...

பிரித்தானியாவில் ஜூன் 15 முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம்

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். இதேவேளை ஜூன் 8-ம் திகதி...

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நான்கு மாவட்டங்களுக்கு மாத்திரம்  ஊடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது மேலும் மூன்று...