மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் மீளப் பெறப்பட்டது! (2ஆம் இணைப்பு)

- Advertisement -

ஹோமாகம பகுதியில் 40 மில்லியன் டொலர் செலவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் மீளப் பெறப்பட்டுள்ளது.

பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

புதிய கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான தருணம் இதுவல்ல : முன்னாள் வீரர்கள் வலியுறுத்து!

40 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள புதிய கிரிக்கெட் மைதானம் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று அலரிமாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் நாட்டின் பாடசாலை மற்றும் ஏனைய கிரிக்கெட் அமைப்புக்களின் உள்ளகக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே பல மைதானங்கள் இருப்பதால் அவற்றினது பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டும் எனவும், புதிதாக பல கோடி ரூபாய் செலவில் மைதானங்கள் அமைப்பதற்கு இது ஏதுவான தருணமல்ல எனவும் முத்த கிரிக்கெட் வீரர்களால் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மூத்த கிரிக்கெட் வீரர்கள் சனத் ஜெயசூர்யா, ரோஷன் மகானாமா, குமார் சங்கக்கார, மகேல ஜெயவர்தனா, லசித் மலிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள், அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் மீளப் பெறப்பட்டது! (2ஆம் இணைப்பு) 1 புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் மீளப் பெறப்பட்டது! (2ஆம் இணைப்பு) 2 புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் மீளப் பெறப்பட்டது! (2ஆம் இணைப்பு) 3 புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் மீளப் பெறப்பட்டது! (2ஆம் இணைப்பு) 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

இலங்கையுடன் இணைந்தே பயணிப்போம் : இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பினையடுத்து கொழும்பில் உள்ள இந்திய உயர்...

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பு!

அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் அரிசியின் அதிகபட்ச சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர்...

நாட்டின் கொரோனா தொற்று : இன்றைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைப்பு குறித்த செய்திகளை ஐ.சி.சி மறுப்பு!

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஐசிசி மறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)...