பிரேசில் பிரஜைகளுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது.
இதேவேளை பிரேசில் உள்ள அமெரிக்கர்கள் அல்லாத ஏனைய நாட்டு பிரஜைகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தடைவிதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் உட்பட , சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் பிரேசிலில் உள்ள அமெரிக்கர்கள் அல்லாத ஏனைய நாட்டு பிரஜைகளுக்கு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரேசில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரேசிலில் இதுவரையான காலப்பகுதியில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 618 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 99 ஆயிரத்து 300 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.