கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பிரேசில் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் நெல்சன் டேயிச் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பிரேசில் ஜனாதிபதி மனித உயிர்களை மதிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரத்தில் பிரேசில் ஜனாதியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து, இதற்கு முன்னதாக கடமையாற்றிய சுகாதார அமைச்சரும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 17 ஆம் திகதி நெல்சன் டேயிச் சுகாதார அமைச்சராக பதவியேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது