கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க செயற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இதற்கன ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பிரித்தானிய பிரதமர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவில் இதுவரையான காலப்பகுதியில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 559 பேர் கொரோனா தொற்றுக்குள்ளதுடன் 36 ஆயிரத்து 793 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது