மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரித்தானியா, அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை…

- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாக உள்ளது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட செயற்றிட்டத்தில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளில் இருந்து இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

- Advertisement -

இதன்படி, இரண்டாம் கட்ட செயற்றிட்டத்தில் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

இலங்கை வெளியுறவு அமைச்சு, அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அந்த நாடுகளில் உள்ள இலங்கை சிவில் விமான சேவை அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில், நாளை, நாளை மறுதினம் மற்றும் 5 ஆகிய திகதிகளில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானங்கள், பிரித்தானியாவின் மூன்று முக்கிய விமான நிலையங்களின் ஊடாக அந்த நாட்டில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு செல்லவுள்ள விசேட விமானம் மூலம் அந்த நாட்டில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சுங்க அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுங்க அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள போதிலும், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz