ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளுக்கு ஐரோப்பிய உறுப்பு நிதியை வழங்குவதற்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவலால் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளுக்கு இந்த நிதியை வழங்க வேண்டுமென குறித்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கமைய, நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் ஜெர்மன் அதிபர் ஆகியோர் குறித்த நிதியை மானியமாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உட்பட்ட நாடுகளுக்கு இவ்வாறு மானியமாக வழங்கப்படும் நிதியை எதிர்காலத்தில் பசுமை முதலீட்டுக்கு வழங்க வேண்டுமெனவும் இரு நாட்டு ஜனாதிபதிகளும் கோரிக்கை முன்வைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.