மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் தலைமையில் விசேட கூட்டம் ஆரம்பம்!

- Advertisement -

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில்   கலந்துரையாடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் தற்போது விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுவருகின்றது.

இன்று முற்பகல் 10.30  அளவில்  குறித்த கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசிக் கட்சி  குறித்த கலந்துரையாடலை புறக்கணித்துள்ளதாக  கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மேலும் சில கட்சிகள் கலந்துரையாடலில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டுள்ளது.

அத்துடன், இந்த கலந்துரையாடலில் 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பலரும் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

விராத் கோஹ்லியின் தலைமையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இந்தியக் குழாம் அறிவிப்பு

விராத் கோஹ்லியின் தலைமையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது,   இதில் ரோஹித் ஷர்மா,சு ப்மன் கில்,மயான்க் அகர்வால், அஜின்கே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட்  ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக...

அதிபர் ஆசிரியர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   இம் முறை உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை...

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குவதே சிறந்த தீர்வு – ஐ.தே.க

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேசிய முடக்க செயற்பாட்டினை அமுல்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே...

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி விசேட நடவடிக்கை

இலங்கைக்கு தேவையான அஸ்ட்ரா செனகா கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியை பெற்றுக் கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் முயற்சிகளை முன்னெடுக்கும் என தாம் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி கோட்டாபய...

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளது-எஸ் எம் மரிக்கார் 

அரசாங்கம் ஆட்சிப் பொறுபேற்று இன்று பல விடயங்களில் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார்  அவர் இதனைக் கூறியுள்ளார் அவர் மேலும்...

Developed by: SEOGlitz