மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடல் அட்டைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது!

- Advertisement -

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான கடல் அட்டைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகுகள் மூலம் கொண்டுவரப்பட்ட குறித்த கடலட்டைகளை , புத்தளம் பாலக்குடா பிரதேசத்தில் வைத்து வாகனத்தில் ஏற்றுவதற்கு முற்பட்டவேளையே நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

763 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த கடலட்டைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 2 படகுகள் மற்றும் சொகுசு வான் ஒன்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேற்படி சந்தேக நபர்கள் குறித்த கடலட்டைகளை கொழும்பிற்கு கடத்திச்செல்ல முற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் கல்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மதுபான சாலைகள் குறித்து அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் ஆறாம் திகதிகளில் அனைத்து...

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேர பிரதான செய்திகள் | 07:30 | 30.05.2020

மறைந்த இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றையதினம் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...