மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சர் விடுக்கும் அறிவிப்பு!

- Advertisement -

பாடசாலைகளைத் மீள திறக்கும் திகதி குறித்து இதுவரை எந்த வித இறுதித் தீர்மானத்தையும் முன்னெடுக்கவில்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண வலயக் கல்வி பணிப்பாளர்களுடன் கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை பாடசாலைகளுக்கு செல்லும் அனைத்து மாணவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பாடசாலைகளில் பாதுகாப்பான சூழல் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகளை மீள திறக்கும் திகதி குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் மீண்டும் பாடசாலைகளைத் திறப்பதில் மிகவும் அவதானமாக செயற்படுவதாகவும் மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாடசாலைகள் திறப்பதற்கு முன்னர் பாடசாலைகளில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் காணப்படுவதாகவும் பாடசாலை மாணவர்களின் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகளை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கருவிகள் தேவைப்படுவதாகவும் கைகளை சுத்தப்படுத்தும் 20 ஆயிரம் தொட்டிகளை வழங்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தண்ணீர் வசதிகள் இல்லாத சுமார் 500இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இலங்கையில் காணப்படுவதாகவும் எனவே . இவற்று மாற்றுவழிகளைத் தேட வேண்டியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் இத்னபோது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அனைத்துது செயற்பாடுகளும் நிறைவடைந்த பின்னர் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுடன் பாடசாலைகளைத் மீள திறக்கும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசியல் அமைப்புக்கு  முரனான வகையில் நாட்டில்  தற்போது  அரசாங்கம்  ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எனவே அதனை நிவர்த்தி செய்வதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற...

ஐ.தே.கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

வேறு  அரசியல் கட்சிகளினூடாக இம்முறை பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களில் கையெழுத்திட்ட தமது கட்சி உறுப்பினர்களிடம்  விளக்கம் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடிதம் அனுப்பியுள்ளார். ஐக்கிய...

கட்டார் எயார்வேய்ஸ் விமானசேவை ஜூன் மாதம் ஆரம்பம்!

கட்டார் எயார் வேய்ஸ் விமான சேவை தனது சேவையினை   ஜூன் மாதம் முதல்   ஆரம்பிக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பல தமது நாட்டின் செயற்பாடுகளை முடக்கியதன் காரணமாக...

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

இலங்கையுடன் இணைந்தே பயணிப்போம் : இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பினையடுத்து கொழும்பில் உள்ள இந்திய உயர்...