மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு ஆலோசனை!

- Advertisement -

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

- Advertisement -

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 13ஆம் திகதி பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில்  பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இதன் போது  கவனம் செலுத்தப்படவுள்ளது.

உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கைகளை  கழுவுதற்கான ஏற்பாடுகள்,மற்றும் மாணவர்களுக்கு சுகவீனம் அல்லது உடல் உஷ்னம் அதிகரித்தல் போன்றன ஏற்பட்டால் அவ்வாறான மாணவர்களுக்கான முதலுதவி வழங்குவதற்கான கட்டிலுடன் கூடிய அறைகளை அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட மூன்று விடயங்களில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதற்காக முன்னேற்பாடுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன்  உயர்தர பரீட்சைகளை நடாத்துவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

வவுனியா பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து சுகாதார பிரிவினரினால்...

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விசேட கூட்டம்!

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம்...

இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் : நான்காம் நாள் ஆட்டம்..

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny கைது!

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny, கடந்த ஆண்டு விஷத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை...

இரத்தினபுரி வைத்தியசாலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள்  இருவர் உட்பட  நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நிர்வாக பிரிவினரிடம் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக  சுகாதார...

Developed by: SEOGlitz