பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 603 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், பாகிஸ்தானில் கொரோனா தொற்றினால் மேலும் 50 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, பாகிஸ்தானில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 67 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 15 ஆயிரத்து 201 பேர் முழுமையாக குணமடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.