மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்

- Advertisement -

பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நாளை முதல் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நன்மை கருதி, விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கு மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது

- Advertisement -

இதன்படி, நாளை, நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 22 ஆம் திகதிகளில் மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒவ்வொரு பாடசாலையிலும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை அதிபர் அல்லது பிரதி அதிபர் சான்றுப்படுத்தவேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி நாளை காலை 9 .00 மணிதொடக்கம்  கொழும்பு 1 முதல் 3 வரையும் மற்றும் கொழும்பு 7 முதல் 12...

இலங்கை கடற்பரப்பில் தமது நாட்டு மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம்

இலங்கை கடற்படைப் படகில் மோதுண்டு  தமது நாட்டு  மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம் வௌியிட்டுள்ளது,. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து  அந்த  நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சர் தமது அதிருப்தியை...

நுவரெலியா வலப்பனை பகுதியில் நில அதிர்வு

நுவரெலியா  வலப்பனை பகுதியை அண்மித்த பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வு  ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க...

மலையக மார்க்கத்தில் ரயில் தடம்புரள்வு

மலையக ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட பகுதியில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில் தடம் புரண்டுள்ளது குறித்த ரயில் இன்று அதிகாலை 5.45 க்கு பதுளையில் இருந்து கண்டி நோக்கி...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால்  இந்த விசேட குழு...

Developed by: SEOGlitz