வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து இன்றைய தினம் மேலும்31 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முகாமுக்கு கடந்த இரு வாரங்களிற்குமுன்னர் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 400 ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பதுஉறுதி செய்யப்பட்ட இந்த நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டபி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, இன்றையதினம் வெளியேற்றப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டிய, கண்டி ,மொனராகலை மற்றும்செவனகலை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டதாக எமது செய்தியாளர்தெரிவித்தார்.