நாட்டில் நேற்றைய தினம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்ட 11 பேரில் 10 பேர் கடற்படை உறுப்பினர்கள் எனவும், மற்றைய நபர் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 424 பேர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை மற்றும் ஹோமாகமை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், இதுவரை 559 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது