மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீர்க்கட்டணம் தொடர்பான விசேட அறிவிப்பு!

- Advertisement -

பெப்ரவரி மாதம் இறுதியாக தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண பட்டியலிலுள்ள கட்டணத்துக்கு சமமான தொகையை மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்கும் செலுத்துமாறு பாவனையாளர்களை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால்  குறித்த காலப்பகுதிக்குள்  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்மானி வாசிப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று நீர்ப்பாவனையை கணக்கிட முடியாமல் போனமையினால்  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

அத்துடன், நீருக்கான கட்டணங்களுக்கு கூடுதலாகவோ அல்லது  குறைவாகவோ நீர்பாவனை செய்யப்பட்டிருந்தால் குறித்த கட்டணங்கள் 06 மாத நீர்க்கட்டண கணக்கில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தாமதக் கட்டணம் அறவிடப்படமாட்டாது எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சபைக்கு மாதாந்தம் 4.5 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்க வேண்டிய நிலையில், இந்த மாதம் 1.35  பில்லியன் ரூபாவே கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நீர் கட்டணம் தொடர்பான பிரச்சினைகளை பொதுமக்கள் 24 மணிநேரமும் 1939 எனும் துரித இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  எதிர்காலத்தில் மின்னஞ்சல்  ஊடாக நீர்கட்டண பட்டியலை பெற்றுக்கொள்வதற்கு  பாவனையாளர்கள் தங்களது மின்னஞ்சல்  முகவரியை 0719 399 999 எனும்  தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல்  அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz