மெய்ப்பொருள் காண்பது அறிவு

நினைவேந்தல் நிகழ்வில் கூட்டமைப்பினரால் குழப்பம் : உறுப்பினர்கள் வெளிநடப்பு!

- Advertisement -

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை நினைவேந்தல் நிகழ்வுக்கு கூட்டமைப்பின் இரு வேட்பாளர்களை அழைத்தமையால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை அமர்வின் போது இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு வேட்பாளர்களை அழைத்தமையால் சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

- Advertisement -

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வுக்கு சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் மற்றும் செயலாளர் திருமதி சுகந்தி கிசோர் ஆகியோரால் சபை உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி காலை 10 மணிக்கு சபைக்கு வருகை தந்த உறுப்பினர்கள் முள்ளிவாய்கால் மண்ணில் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களும் முன்னாள் மகாணசபை உறுப்பினர்களுமான ப.சத்தியலிங்கம் மற்றும் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் சபையின் அஞ்சலி நிகழ்வுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது ஒரு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் சபை அஞ்சலி நிகழ்வு எவ்வாறு அழைக்க முடியும் என சபை உறுப்பினர்கள் சிலர் தவிசாளருடன் முரண்பட்டனர்.

இதனையடுத்து சபையில் இருந்து வெளியேறி குறித்த வேட்பாளர்களுடன் பிரதேச சபை வளாகத்தில் அஞ்சலி நிகழ்வை தவிசாளர் நடத்தியிருந்தார்.

தவிசாளர் தனது கட்சி சார்ந்த குறித்த இருவருக்கு மட்டும் அழைப்பு விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தவிசாளரின் தன்னிச்சையான போக்கை கண்டித்தும் 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாகவும், சபையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காரணமின்றி தவிசாளர் ஒத்தி வைத்துள்ளதாகவும் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் தவிசாளர் து.நடராஜசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், ‘சபையில் அஞ்சலி நிகழ்வு நடத்த முற்பட்ட வேளை குழப்பம் ஏற்பட்டதால் சபையின் வெளியில் சென்று இந்த அஞ்சலி நிகழ்வை செய்தேன்.

நான் கட்சி பார்த்து செயற்படவில்லை. குழப்பம் காரணமாக சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

நினைவேந்தல் நிகழ்வில் கூட்டமைப்பினரால் குழப்பம் : உறுப்பினர்கள் வெளிநடப்பு! 1 நினைவேந்தல் நிகழ்வில் கூட்டமைப்பினரால் குழப்பம் : உறுப்பினர்கள் வெளிநடப்பு! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசியல் அமைப்புக்கு  முரனான வகையில் நாட்டில்  தற்போது  அரசாங்கம்  ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எனவே அதனை நிவர்த்தி செய்வதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற...

ஐ.தே.கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

வேறு  அரசியல் கட்சிகளினூடாக இம்முறை பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களில் கையெழுத்திட்ட தமது கட்சி உறுப்பினர்களிடம்  விளக்கம் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடிதம் அனுப்பியுள்ளார். ஐக்கிய...

கட்டார் எயார்வேய்ஸ் விமானசேவை ஜூன் மாதம் ஆரம்பம்!

கட்டார் எயார் வேய்ஸ் விமான சேவை தனது சேவையினை   ஜூன் மாதம் முதல்   ஆரம்பிக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பல தமது நாட்டின் செயற்பாடுகளை முடக்கியதன் காரணமாக...

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

இலங்கையுடன் இணைந்தே பயணிப்போம் : இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பினையடுத்து கொழும்பில் உள்ள இந்திய உயர்...