மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாவலப்பிட்டி நகரசபை தலைவர் ஹட்டன் நீதவானிடம் முன்னிலை

- Advertisement -

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாவலப்பிட்டிய நகரசபை தலைவர் உட்பட 7 பேர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்

.ஏழு சந்தேகநபர்களும் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

கைது செய்யப்பட்ட இன்றைய தினம் அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்

.தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,

ஹட்டன் பொலிஸாரின் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், வட்டவளை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் இணைந்து குறித்த சுற்றுலா விடுதியை நேற்று இரவு சுற்றிவளைத்து இவர்களை கைது செய்துள்ளனர்.

அத்துடன் இதன் போது தப்பிச் சென்றவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல் மாகாணத்தில் ஊரடங்கு – எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்குத் தீர்மானம்

மேல் மாகாணத்தில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்  வழமைப்போன்று திறக்கப்படும் என இலங்கை  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெற்றோலியக்  கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி  பொலிஸ்...

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

Developed by: SEOGlitz