நாட்டில் தற்போது வளி மாசடைவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டில் போக்குவரத்து மற்றும் தொழில் நடவடிக்கைகள் இடம்பெறாமையினால் வளி மாசடைவு வீதம் வீழ்ச்சியடைந்திருந்தாக தேசிய கட்டிட ஆராயச்சிநிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,தற்போது குறித்த நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் வளி மாசடைவு அதிகரித்துவருவதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்புமாவட்டத்தில் வளி மாசடைவு 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறிகுறிப்பிட்டுள்ளார் அத்துடன், கொரோனாவைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் வளி மாசடைவு மற்றும் கார்பன் டை ஒக்சைட் அளவுகுறைவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.