மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை : நாட்டில் சில பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

- Advertisement -

நாட்டில் நிலவும் வரும் சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, இரத்தினபுரி, எலபாத, கலவான மற்றும் கிரியெல்ல ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

- Advertisement -

இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் ஓப்பநாயக்க, பலாங்கொடை, எகலியகொடை, பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்திபுனி மாவட்டத்திற்குட்பட்ட பலாங்கொடை பகுதியில், இன்று காலை வீசிய கடும் காற்று காரணமாக மரமொன்று முறிந்து விழுந்ததில் 10 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொடை,பின்னவல அனுஹஸ் போதிகம பகுதியிலேயே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

அத்துடன், பலாங்கொடை பிரதேச செயலக பிரிவுகுகுட்பட்ட மெத்தகந்த தியவன்ன பகுதியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நாட்டின் ஏனைய ஒன்பது மாவட்டங்களுக்கும் முன்னதாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிபு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது

இதன்படி, காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி மாவட்டத்தின், , அக்மீமன, எல்பிட்டிய மற்றும் நியகம பகுதிகளுக்கு மஞ்சல் நிற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, பத்தேகம, நெலுவ மற்றும் தவலம ஆகிய பகுதிகளுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்தறை மாவட்டத்தின் அகலவத்த, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, புலத் சிங்ஹல மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாக பிரிவுகளுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், களுத்தறை மாவட்டத்தின் ஹொரண மற்றும் மத்துகமை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, கொடபொல ஆகிய பிரதேச செயலப் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, கோகாலை மாவட்டத்தின் மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியின் தனியார் காணியொன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த, காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றை அதன் உரிமையாளர் சுத்தம்...

மீண்டும் மின் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பு தொடர்பில் முறையற்ற திட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே, மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப்...

IPL இன் இரண்டாவது போட்டி இன்று!

11 ஆவது இந்தியன் பிரிமியர் லிக் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அத்துடன், இந்த போட்டி டுபாயில் இன்று...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்பனை!

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தநிலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தொடருமென தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட...

ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் பதவி துறக்க தீர்மானம்!

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதற்கு தான் இதுவரை தீர்மானிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும், கட்சியின் மேம்பாட்டுக்காக பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம்...

Developed by: SEOGlitz