மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் சீரற்ற வானிலை: களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு!

- Advertisement -

நாட்டில் தொடர்ந்துவரும் அதிக மழையுடனான வானிலை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதன்காரணமாக மில்லகந்த பிரதேச செயலக பிரிவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே குறித்த பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலையான செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகலை மாவட்டத்தின் பொல்கஹாவெல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோர பிரதேசசெயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின், நாகொட, பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியகம மற்றும் போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர்பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட, அஹங்கம ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர,புலத்சிங்கல, வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேசசெயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்ட மற்றும் தெரனியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின், கங்க இஹலகோரல மற்றும் தும்பன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி நாளை காலை 9 .00 மணிதொடக்கம்  கொழும்பு 1 முதல் 3 வரையும் மற்றும் கொழும்பு 7 முதல் 12...

இலங்கை கடற்பரப்பில் தமது நாட்டு மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம்

இலங்கை கடற்படைப் படகில் மோதுண்டு  தமது நாட்டு  மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம் வௌியிட்டுள்ளது,. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து  அந்த  நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சர் தமது அதிருப்தியை...

நுவரெலியா வலப்பனை பகுதியில் நில அதிர்வு

நுவரெலியா  வலப்பனை பகுதியை அண்மித்த பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வு  ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க...

மலையக மார்க்கத்தில் ரயில் தடம்புரள்வு

மலையக ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட பகுதியில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில் தடம் புரண்டுள்ளது குறித்த ரயில் இன்று அதிகாலை 5.45 க்கு பதுளையில் இருந்து கண்டி நோக்கி...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால்  இந்த விசேட குழு...

Developed by: SEOGlitz