மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை – 200 மி.மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை :

- Advertisement -

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், இரத்தினபுரி பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அத்துடன், கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் தவலம பகுதிக்கும், களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் நோர்வூட் பகுதிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொத்மலை ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது

இந்த நிலையில், மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நீர் மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் வான் கதவுகள் திறக்கப்படடும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் ஏற்பட்டுள்ள நில வெடிப்பு காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா, இரத்தினபுரி, கோகாலை, களுத்தறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான தகவல்களை வழங்குகின்றார் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்

இதேவேளை, கடற்பிராந்தியங்கள் தொடர்பிலும் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெளிபடுத்தினார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு – வெளியே செல்லும் உங்களுக்கு விசேட அறிவித்தல்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்த நிலையில், அலுவலக...

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளின் கால எல்லையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...

41 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று...

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால்...