மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

- Advertisement -

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த கடற்படை வீரர்கள் 16 பேர் இன்று குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 237ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், அவர்களில் 7 பேர் ஹோமாகமை- வைத்தியசாலையிலும், 4 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், மூவர் IDH வைத்தியசாலையிலும், இருவர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்ததாக கடற்படை ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்களுக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அடிப்படையில், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த 16 கடற்படை வீரர்களும் சுகாதார ஆலோசனைக்கு அமைவாக, மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில், கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 28 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 578 பேர் கடற்படை அதிகாரிகள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளான 415 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 47 ஆயிரத்து 521 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நேற்றைய நாளில் மாத்திரம் ஆயிரத்து 108 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெலிசறை கடற்படை முகாமில் மேலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வெலிசறை கடற்படை முகாமில் நிலவும் சூழ்நிலைக்கு அமைய, கடற்படை வீரர்களுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமமானது என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், குறைந்த இடத்தில் அதிக அளவானோர் தங்கியுள்ளமையே கடந்படையினருக்கு மத்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

கடற்படையினருக்கு மத்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவது குறித்து ஆராயும் விசேட வைத்தியர்கள் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள முதற்கட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த வைத்தியர்கள் குழுவின் ஆலோசனைக்கு அமைவாக, வெலிசறை கடற்படை முகாமில், தங்க வைக்கக்கூடிய குறைந்த அளவிலானோரை மட்டும் தங்கவைத்துக் கொண்டு, ஏனையோரை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த கடற்படையினரை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிய பின்னர், வெலிசறை கடற்படை முகாமை முழுமையாக தொற்று நீக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எவ்வாறு என்பது இதுவரை கண்டறியப்படாத ஒரு விடயமாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 82 பேர் இன்று தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கல்கிரியாகம சிவில் பாதுகாப்பு படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு 5 பேருந்தகளில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கல்கிரியாகம சிவில் பாதுகாப்பு படை முகாமில் உள்ள உயர் பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் காணப்படும் மூன்று மண்டபங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த 82 கடற்படை வீரர்களையும் இன்று முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், தனிமைப்படுத்தப்படும் கடற்படையினரையும், குறித்த முகாமில் உள்ள ஏனைய சிவில் பாதுகாப்பு படையினரையும் தொடர்புகள் இன்றி வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று தேசிய...

அங்கஜன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், உரிய திகதியில் விண்ணப்பங்கள் அனுப்பமுடியாது...