மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம்!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்கமைய, நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்னொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் கடந்த ஏப்ரல் கடந்த 11 ஆம் திகதி முழங்காவில் பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

மேலும், அவருடைய சகோதரனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டிருந்தது.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 154 பேர் இதுவரை முற்றாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 187 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 505 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கமைய, தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் 141 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை 66 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 75 பேரும், இரணவில வைத்தியசாலையில் 22 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 55 பேரும் கொரோனா தொற்று காரணமாக இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, கடற்படை வைத்தியசாலையில் 126 பேரும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 18 பேரும் இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 157 பேர் பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு…!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 16 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

நாளைமுதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகள்! விபரம் உள்ளே..

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகர எல்லைகள் வரை...

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

Developed by: SEOGlitz